இயற்கை அழகு குறிப்புகள் 100 | Natural Beauty Tips in Tamil

Written by
Natural Beauty Tips in Tamil
  • 10 months ago

100 Natural Beauty/Beautiful Tips

100 Natural Beauty Tips in Tamil

பெண்கள் அழகிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர், அத்தகைய அழகை வெளிப்படுத்த சருமத்தைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகிறது. அந்த அழகை பராமரிக்க இயற்கையான சில “இயற்கை அழகு குறிப்புகள்” கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளையும் அகற்றும்.
  2. முகம் பளபளக்க புதினா சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் அகன்று சுத்தமாகவும் வசீகரமாகவும் இருக்கும்.
  3. கசகசா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து அரைத்து முகத்தில் பூசிக்கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
  4. தினமும் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் முகத்தில் பருக்கள் வராது.
  5. குளிர்ந்த நீர் சிறிதளவு அதனோடு பால் சேர்த்து துணியில் தொட்டு முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடவும். இதை தொடர்ந்து செய்வதால் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறும்.
  6. தக்காளி வெள்ளரிக்காய் இவைகளை நன்றாக அரைத்து இதனுடன் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
  7. இரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் அரைத்து முகத்தில் பூசினால் எண்ணெய் வடிதல் மற்றும் சரும அழுக்குகள் நீங்கும்.
  8. வெந்தயத்தை ஊறவைத்த நீரில் காட்டன் துணியால் (Cotton Cloth) நனைத்து முகத்தில் தடவினால் நொடியில் முகம் பளபளப்பாகும்.
  9. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அதனுடன் பால் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ முகம் மென்மை அடையும்.
  10. எலுமிச்சையை போலவே உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை அரைத்து அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால் முகம் பொலிவோடு மின்னும்.
  11. தினமும் பப்பாளி பழத்தை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ முகம் பொலிவுடன் பளபளப்பாகவும் இருக்கும்.
  12. முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் மறையும். இரவில் படுக்க போகும் முன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பாகும். மேலும் முழு உடல் அழகு பெறும்.
  13. கை கால்கலிலுள்ள கருமை போக வெள்ளரிக்காய் சாற்றில் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நீங்கும்.
  14. தேங்காய் பாலுடன் தேன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும்.
  15. முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவினால் தேவையற்ற முடி வளர்ச்சி கட்டுப்படும்.
  16. பன்னீருடன் சந்தனம் கலந்து முகத்தில் தடவினால் முகப்பரு தழும்புகள் மறையும்.
  17. கொத்தமல்லி இலை, தயிர், ஆலோவேரா ஜெல் இவைகளை சேர்த்து அரைத்து அதில் பச்சரிசி மாவு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் மென்மையாகவும் பட்டு போன்றும் இருக்கும்.
  18. காது மூக்கு புண் குணமாக: தோடு, மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்பட்டால் பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரைக் கொண்டு புண்களை கழுவினால் புண் விரைவில் குணமாகும்.
  19. மஞ்சள்தூளை தேன் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் சிறிது நேரம் கழித்து முழங்கையை இரண்டு நிமிடம் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு கழுவினால் முழங்கை முழங்கால் கருமை மறையும்.
  20. கற்றாழை ஜெல்லை தேன் உடன் சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
  21. ஒரு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 15 ல் இருந்து 20 நிமிடம் ஊறவைத்து பின் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முழங்கையில் வறட்சி நீங்கி முழங்கை மென்மையாக இருக்கும்.
  22. முதுமை அடைவதை தடுக்க தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வரவும்.
  23. அண்ணாச்சி பழம் மற்றும் தேன் கலந்து நெற்றியில் உள்ள கருமை போக்க வல்லது இவை இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொண்டு நெற்றி முழுவதும் தடவ வேண்டும் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழிவினால் அற்புதமான பலனை தரும்.
  24. பப்பாளி இறந்த செல்களை நீக்க மிகவும் சிறந்தது. தோளுக்கு நிறத்தை தரக்கூடியது பப்பாளியை பேஸ்டு செய்து நெற்றியில் தடவி காய்ந்த பின் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.
  25. இளநீர் மற்றும் சந்தன பவுடரை சரிபாதியாக எடுத்து நெற்றியில் தடவினால் நெற்றியில் உள்ள கருமை அகன்று விடும். இது ஒரு சிறந்த முறையாகும் இதனை வாரத்தில் மூன்றிலிருந்து நான்கு முறை செய்யலாம்.
  26. அரிசி மாவு ஒரு ஸ்பூன் எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் யோகட், ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து கால்களில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதனால் கால்களில் இருக்கும் இறந்த செல்கள் அகற்றலாம், விடாப்படியான தழும்புகளும் மறையும்.
  27. புதினா சாறு எடுத்து கால்களில் தடவினால் கால்களில் உண்டாகும் கருமை சொரசொரப்பு நீங்கி மென்மையான கால்களை பெறுவீர்கள். முட்டிகளுக்கும் தேய்த்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
  28. குதிங்கால் வெடிப்பு மறைய எள்ளை ஊறவைத்து அரைத்தெடுத்து, இரவு தூங்கும் போகும் முன் பாதங்களில் பற்று போட ஒரே வாரத்தில் நல்ல பலன் தெரியும்.
  29. சேற்றுப்புண் போக மஞ்சள், விளக்கெண்ணெய் இரண்டையும் சரிசமமாக எடுத்து குலைத்து கால்களில் தேய்த்து வர குணமாகும்.
  30. தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் ஆரோக்கியமாகவும் பளிச்சென்று காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால் முகத்தில் நிறம் அதிகரிப்பதை காணலாம்.
  31. சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்தசெல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்.
  32. தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் கருமை நீங்கி முகம் பளிச்சென்று வெண்மையாகும்.
  33. வெள்ளரிக்காயை எடுத்து கண்களுக்கு வைத்து 15 லிருந்து 20 நிமிடம் விடவும். இதனால் கண்களில் சோர்வு நீங்கி கண்களின் கீழுள்ள கருவளையம் அகலும்.
  34. கைகளில் கருமையை போக்க வெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர்களுக்கு முகத்தை விட கைகளில் கருமை அதிகமாக இருக்கும் இந்த கருமையை போக்க ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி காபித்தூள், 2 தேக்கரண்டி சர்க்கரை, 3 தேக்கரண்டி தயிர் எடுத்து நன்றாக கலந்து கைகளில் தடவி 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பின்னர் கைகளை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வர கைகளில் உள்ள கருமை நீங்க கைகள் பளிச்சென்று மாறும்.
  35. முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெற காய்ச்சாத பாலை 2 ஸ்பூன், சர்க்கரை 2 ஸ்பூன் சோற்றுக்கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் மூன்றையும் ஒன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்த பின் 15 நிமிடம் வைத்திருந்து ஈரத் துணியால் முகத்தை துடைக்க வேண்டும்.
  36. முகத்தை பொலிவு பெற செய்யும் அரிசி மாவு: 3 டீஸ்பூன் அரிசி மாவு, தயிர் மற்றும் காய்ச்சாத பால் அல்லது பன்னீர் ஆகியவற்றை நன்றாக குழைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி அழுக்குகளை நீக்கும். மேலும் வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் மங்கிய நிறம் பொலிவு பெறும்.
  37. முகம் இளமையான தோற்றத்துடன் இருக்க ஒரு தோலுரித்த வாழைப்பழத்தில் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்டு செய்து முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடம் கழித்து நீரால் கழுவுங்கள்.
  38. முட்டை வெள்ளை கரு, சோள மாவு ஒரு தேக்கரண்டி, சர்க்கரை 2 தேக்கரண்டி இவற்றை ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து பேஸ்டு செய்து இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக காய்ந்தவுடன் உரித்து எடுக்கும் போது முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் வந்துவிடும்.
  39. முகம் பொலிவு பெற கொய்யா இலைகளை நன்கு கழுவி அரைத்து சிறிது ரோஸ் வாட்டர் நீரில் கலந்து முகத்தில் போட்டு, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழிவினால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
  40. உதட்டில் ஏற்படும் கருமையை நீக்க, தினசரி இரவு தூங்கும் முன்  புதினா மற்றும் சிறிது கொத்துமல்லி அரைத்து உதட்டில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
  41. முகம் பளபளப்புக்கு புதினாச்சாறு எலுமிச்சைச்சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து 3 நாட்களுக்கு ஒரு முறை ஆவி பிடித்தால் அழுக்குகள் அகன்று சருமம் பொலிவு பெறும்.
  42. வடித்த கஞ்சியில் சிறிது நீர் சேர்த்து, நீர்த்த நிலையில் அதுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து முகத்தில் தடவினால் முகப்பருக்கள் மறைந்துவிடும்.
  43. முகத்தில் உள்ள கருமை நீங்க பாலில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் கருமை உள்ள இடங்களில் தேய்த்து உலர்ந்த பின் கழுவினால் முகம் வெள்ளையாக மாறும்.
  44. தக்காளியில் ப்ளீச்சிங் தன்மையும், தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பின் கழுவினால் சருமம் பிரகாசமாக மின்னும்.
  45. தலைமுடி அடர்த்தியாக வளர, வாரம் ஒருமுறை வெந்தயத்தை முதல் நாள் இரவு நேரத்தில் மூன்று ஸ்பூன் அளவு நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் எழுந்து ஊறிய வெந்தய நீரை வடிகட்டி நன்கு தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்பு ஊறிய வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். இதனால் முடி நன்கு வளரும் உடல் சூட்டையும் தணிக்கும்.
  46. முகம் பளபளக்க சிறிதளவு பால், 1/4 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு, 1 ஸ்பூன் கடலை மாவு, சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 2 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
  47. பப்பாளி துண்டுகள், கற்றாழை ஜெல், சிறிது பால், 1/4 ஸ்பூன் சர்க்கரை ஆகியவை கலந்தே 10 நிமிடம் முகத்தில் மசாஜ் செய்தால் முகம் தங்கம் போல மின்னும்.
  48. முட்டை வெள்ளை கரு ஒன்று, கடலைமாவு 2 டேபிள் ஸ்பூன், தேன் அரை டேபிள் ஸ்பூன் என கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 லிருந்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவும். இப்படி செய்தால் முகச்சுருக்கங்கள் மறைந்து வயது முதிர்வு தோற்றத்தை தடுக்கலாம்.
  49. சந்தனத்தில் உள்ள உட்பொருட்கள் முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை போக்கும். ஆகவே சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்டு செய்து தினமும் முகத்தில் தடவி 20 இருந்து 30 நிமிடம் ஊற வைத்து கழுவிவர நல்ல மாற்றத்தை காணலாம்.
  50. முகப்பரு வந்தால் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் . மேலும் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை வெறும் நீரால் முகம் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல்லை நன்றாக மசித்து கஸ்தூரி மஞ்சள் சேர்த்து முகத்தில் போடலாம்.
  51. முகப்பருவை தடுக்க வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அத்துடன் வெந்தயம் சேர்த்து முகத்தில் மாஸ்க் போடலாம்.

Natural Beauty Tips in Tamil
Natural Beauty Tips in Tamil

Comments

  • Very good Keep it up

    Amaravathi December 28, 2022 11:23 am Reply

Leave a Reply

Your email address will not be published.

Shares