
தமிழகத்தில் வருகின்ற 2022- 2023 கல்வி ஆண்டிற்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நவம்பர் 7ல் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பொதுத் தேர்வு நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும். அதற்கான கால அட்டவணை முன்கூட்டியே பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும். அதற்கேற்ப மாணவர்களும் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்வர்கள்.
2022-23 பொதுத் தேர்வுக்கான அட்டவணை விவரங்கள் : 10th 11th 12th Exam Time Table
10 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 10th Exam Time Table 2022-23 Tamil Nadu
10 ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும்.
இதில் 12,800 பள்ளிகளில் பயிலும் 10 இலட்சம் மாணவர்கள் 3,986 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
- 06.04.2023 [ வியாழன் ] – மொழித்தாள்
- 10.04.2023 [ திங்கள் ] – ஆங்கிலம்
- 13.04.2023 [ வியாழன் ] – கணிதம்
- 15.04.2023 [ சனி ] – விருப்ப மொழித்தாள்
- 17.04.2023 [ திங்கள் ] – அறிவியல்
- 20.04.2023 [ வியாழன் ] – சமூக அறிவியல்
11 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 11th Exam Time Table 2023 Tamil Nadu
11 ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும்.
இதில் 7,600 பள்ளிகளில் பயிலும் 8.50 இலட்சம் பள்ளி மாணவர்கள் 3,169 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
- 14.03.2023 [ செவ்வாய் ]
- மொழிப்பாடம்
- 16.03.2023 [ வியாழன் ]
- ஆங்கிலம்
- 20.03.2023 [ திங்கள் ]
- இயற்பியல், பொருளாதரவியல், கணினி நுட்பவியல்
- 24.03.2023 [ வெள்ளி ]
- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
- 28.03.2023 [ செவ்வாய் ]
- வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்
- 30.03.2023 [ வியாழன் ]
- கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், இந்திய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகள், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர்வேதியியல், அட்வான்ஸ்ட் தமிழ், ஹோம்சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் தொழிற்கல்வி, பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
- 05.04.2023 [ புதன் ]
- கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபையாலஜி, ஊட்டசத்து மற்றும் டயாடிட்டிக்ஸ், டெக்ஸ்டைல் & ஆடைவடிவமைப்பு, உணவு சேவை நிர்வாகம், வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)
12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 12th Exam Time Table 2022-23 Tamil Nadu
12 ம் வகுப்பு பொதுத்த் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும்.
இதில் 7,600 பள்ளிகளில் இருந்து 8.80 இலட்சம் பள்ளி மாணவர்கள் 3,169 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
- 13.03.2023 [ திங்கள் ]
- மொழிப்பாடம்
- 15.03.2023 [ புதன் ]
- ஆங்கிலம்
- 17.03.2023 [ வெள்ளி ]
- கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், இந்திய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகள், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர்வேதியியல், அட்வான்ஸ்ட் தமிழ், ஹோம்சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் தொழிற்கல்வி, பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
- 21.03.2023 [ செவ்வாய் ]
- இயற்பியல், பொருளாதரவியல், கணினி நுட்பவியல்
- 27.03.2023 [ திங்கள் ]
- கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபையாலஜி, ஊட்டசத்து மற்றும் டயாடிட்டிக்ஸ், டெக்ஸ்டைல் & ஆடைவடிவமைப்பு, உணவு சேவை நிர்வாகம், வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)
- 31.03.2023 [ வெள்ளி ]
- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்,
- 03.04.2023 [ திங்கள் ]
- வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்