சந்திர கிரகணம் 08.11.2022 தமிழகத்தில் பார்க்க முடியுமா?

Written by
Blood Moon Eclipse

முழு சந்திர கிரகணம் இன்று 08.11.2022 நிகழ உள்ளதால் இந்தியாவின் பல பகுதிகளில் பகுதி சந்திர கிரகணத்தை பார்க்க இயலும். சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டி இருப்பதால் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க இயலாது .

சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் தோன்றுகிறது. சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும்.

முழு சந்திர கிரகணம்
முழு சந்திர கிரகணம்

இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குச் செல்லச் செல்ல சந்திர கிரகணத்தைப் பார்க்க இயலும். இந்தப் பகுதிகளில், சந்திர கிரகணம் பொதுவாக எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் ஏற்படும். மேற்கு வானில் சூரியன் மறையும் போது, கிழக்கு வானில் நிலவு வெளிப்படும் நேரத்தில் குறைவான காலகட்டத்தில் பகுதி சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

இந்தியாவின் பெரும்பகுதியில் கிரகணம் தெரியாது என்றாலும், கொல்கத்தா போன்ற கிழக்கு பகுதிகளில் மட்டுமே இதன் இறுதி நிலைக்களைக் காணலாம். கொல்கத்தாவில் சந்திரன், கிழக்கு அடிவானத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு உதயமாகும் என்று கணக்கிடப்படுகிறது.

மேகமூட்டம் இல்லாமல் இருந்து வானத்தின் வெளிச்சம் குறைந்தால் 5.11 மணி வரை நிகழும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்புள்ளது. சந்திர கிரகணம் முடியும் பிற்பகுதியை இந்தியாவின் கிழக்கு பகுதி மக்கள் காணமுடியும் .

PROMOTED CONTENT

தமிழகத்தில் சந்திர கிரகணம் நேரம் எப்போது?

தமிழ் நாட்டில் சென்னையில் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி 5 மணி 39 நிமிடங்களில் தொடங்கி அடுத்த நாள் காலை 8.59 மணி அளவில் முடிவடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் தொடங்கும் நேரம்?

  • சந்திரனின் கருமையான நிழல் பகுதி தொடக்கம் மதியம் 2:38
  • முழு சந்திர கிரகணம் தொடக்கம் மதியம் 3:45
  • முழு சந்திர கிரகணம் ஏற்படும் நேரம் மாலை 4:18
  • முழு சந்திர கிரகணம் முடியும் நேரம் மாலை 5:11
  • சந்திர கிரகணம் கரு நிழல் பகுதி விலகல் மாலை 6:19

கிரகணம் ஏற்படும் போது நிலவு ஏன் சிவப்பாக மாறுகிறது ?

வெள்ளை ஒளிக்குள் ஏழு நிறங்கள் இருப்பது நீங்கள் அறிந்ததே. அதில் நீல ஒளியானது பூமியின் வளிமண்டலத்தில் ஒளிச் சிதறல் அடைகிறது. இதன் காரணமாக வானம் நீல நிறமாக இருக்கிறது. அதேபோல ஒளியானது வளிமண்டலத்தின் வழியே செல்லும் போது சிவப்பு நிறமானது ஒளி விலகள் அடைந்து நிலவின் மீது படுவதால் நிலவு சிவப்பு நிறமாகக் காணப்படுகிறது.

உணவுகளில் துளசி, தர்ப்பைப்புல்

கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது என்பதால் தான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் பிற்பகல் 12 மணிக்குள் தங்களின் உணவுகளை முடித்துக்கொள்ள வேண்டும். சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல் மற்றும் துளசியை போட்டு வைக்க வேண்டும். கிரகணம் முடிந்த பின்னர் குளித்து சாமி கும்பிட்டு விட்டு சாப்பிடலாம். இது ஒரு நல்ல முறை ஆகும்.

சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாமா?

சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சிலர் அச்சம் காரணமாக கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து விடுவார்கள். எனவே இதை பார்க்காமல் விட்டால் அடுத்து மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

அடுத்த சந்திரகிரகணம் எப்போது?

அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்று நிகழும் என்றும் , ஒரு பகுதி சந்திர கிரகணம் அடுத்த அக்டோபர் 28, 2023 அன்று நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேஷ ராசியில் சந்திரன் ராகு கூட்டணி

சந்திர கிரகணம் தோன்றும் பொழுது சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டு சந்திர கிரகணம் ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்பட்டால் பார்சுவ சந்திரகிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேது ஒரே வீட்டில் இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள்.

ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரகணம் நிகழும் என கூறியுள்ளனர். அதை தொடர்ந்து நாளை ஏற்படும் சந்திர கிரகணத்தில் அனைத்து வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்களின் படி சூரியன் கேது உடன் துலாம் ராசியிலும் சந்திரன் ராகு உடன் மேஷ ராசியிலும் இணைகின்றனர்.

Article Categories:
விண்வெளி

Comments

  • Hi Shan super very nice keep it up god bless you

    Amaravathi November 13, 2022 8:44 am Reply

Leave a Reply

Your email address will not be published.

Shares
%d bloggers like this: