இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள் என்பது நாட்டின் முதன்மை குடிமகனுக்கு ஆட்சி, நிர்வாகம், சட்டமன்றம், நீதித் துறை, நிதித் துறை, இராணுவ நெருக்கடி கால அதிகாரங்களை குறிப்பதாகும். இந்திய குடியரசு தலைவருக்கு ஏராளமான அதிகாரங்கள் உள்ளன. அசாதாரண சூழ்நிலையில் தன் விருப்புரிமையில் அதிகாரத்தை பயன்படுத்தும் உரிமையும் உண்டு.
இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள் :
Powers of the President of India :
இந்தப் பதிவில் இந்திய குடியரசு தலைவருக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பதை பார்க்கலாம்.
- இந்திய அரசியலமைப்பின் படி இந்திய அரசின் தலைவர்?
- குடியரசுத் தலைவர்
- இந்தியாவின் நிர்வாகத் தலைவர்?
- குடியரசுத் தலைவர்
- இந்தியாவின் முப்படைகளின் தளபதி?
- குடியரசுத் தலைவர்
- இந்தியாவின் அரசியலமைப்பின் அதிகார வரிசை பட்டியலில் முதலிடம் பெறுபவர்?
- குடியரசுத் தலைவர்
- குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை?
- ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை
- குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர்?
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
- குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்?
- 5 ஆண்டுகள்
- குடியரசுத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக இருப்பின் ராஜினாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்?
- குடியரசுத் துணைத் தலைவருடன்
- குடியரசு துணைத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக இருப்பின் ராஜினாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்?
- குடியரசுத் தலைவரிடம்
- குடியரசுத் தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்க ப்படுவதற்குரிய தகுதிகள் பெற்று இருக்க வேண்டும்?
- மக்களவை லோக்சபா
- துணை குடியரசு தலைவருக்கான பணிகள் குறித்து கருத்து படிவம் எந்த நாட்டு அரசியலமைப்புடன் பெறப்பட்டது?
- அமெரிக்கா
- குடியரசுத் தலைவர் சம்பளம் குறித்த விவரம் குறிக்கப்பட்டுள்ள அட்டவணை?
- இரண்டாவது அட்டவணை
- போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர்?
- டாக்டர் சஞ்சீவி ரெட்டி
- இருமுறை தொடர்ந்து குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர்?
- டாக்டர் ராஜேந்திர பிரசாத்
- தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர்?
- கே ஆர் நாராயணன்
- குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான குறைந்தபட்ச வயது?
- 35
- குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தேவையான ஆதரவு?
- மூன்றில் இரு பங்கு
- குடியரசு தலைவர் மறு தேர்வுக்கு தகுதியுடையவரா?
- ஆம்
- குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணை எந்த சபையில் நிறுத்தப்படலாம்?
- மக்களவை அல்லது மாநிலங்களவை
- குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை?
- நான்கில் ஒரு பங்கு
- புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்த பெற வேண்டும்?
- 6 மாதங்களுக்குள்
- இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர்?
- யாருமில்லை
- குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு?
- மூன்றில் இரு பங்கு
- குடியரசுத் தலைவர் திடீரென இறக்க நேரிட்டால் பதவியை கவனித்துக் கொள்பவர்?
- துணை குடியரசு தலைவர்
- இந்தியாவின் பிரதிநிதி?
- குடியரசு தலைவர்
- குடியரசு தலைவரின் பதவிக்காலம்?
- 5 ஆண்டுகள்
- துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்?
- 5 ஆண்டுகள்
- மாநிலங்களவையின் தலைவராக பணியாற்றுபவர்?
- துணை குடியரசுத் தலைவர்
- அரசியலமைப்பின் அதிகார வரிசை பட்டியலில் இரண்டாம் இடம் வகிப்பவர்?
- துணை குடியரசுத் தலைவர்
- குடியரசுத் தலைவர் செயல்பட இயலாத தருணங்களில் குடியரசு தலைவராக செயல்படுவர்?
- துணை குடியரசுத் தலைவர்
- குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுப்பது?
- மக்களவை மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்
- துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுப்பது?
- மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்
- மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் படி செயல்படுவோர்?
- குடியரசுத் தலைவர்
- பிரதமரின் ஆலோசனையின் படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர்?
- குடியரசுத் தலைவர்
- குடியரசு தலைவரால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர்?
- மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்
- அமைச்சரவை என்பது குடியரசுத் தலைவருக்கு கூட்டுப் பொறுப்பு வாய்ந்ததாக உள்ளத?
- ஆம்
- குடியரசுத் தலைவர் திடீரென பதவி இழக்க நேரிட்டால் பதவி கவனித்துக் கொள்பவர்?
- துணை குடியரசுத் தலைவர்
- குடியரசுத் தலைவர் துணை குடியரசுத் தலைவரும் இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவர் பதவியை கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர்?
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
- இந்திய பிரதமரை நியமிப்பவர்?
- குடியரசு தலைவர்
- மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர்?
- குடியரசுத் தலைவர்
- உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர்?
- குடியரசுத் தலைவர்
- மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்?
- குடியரசுத் தலைவர்
- நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்?
- குடியரசுத் தலைவர்
- தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்?
- குடியரசுத் தலைவர்
- மத்திய பொது பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பது?
- குடியரசுத் தலைவர்
- குடியரசுத் தலைவர் மக்களவை ஒரு உறுப்பினரா?
- இல்லை
- குடியரசுத் தலைவர் மக்களவையின் உள்ளுறுப்பா?
- ஆம்
- குடியரசுத் தலைவர் மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள் நியமிக்க முடியும்?
- இரண்டு உறுப்பினர்கள் (ஆங்கிலம் இந்தியர்கள்)
- குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள் நியமிக்க முடியும்?
- 12 உறுப்பினர்களை
- பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர்?
- குடியரசுத் தலைவர்
- பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர்?
- குடியரசுத் தலைவர்
- குடியரசுத் தலைவருக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு?
- ஷரத்து 123
- குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசரகால சட்டத்திற்கான காலவரையில்?
- 6 வாரங்கள்
- மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் பெற்றவர்?
- குடியரசுத் தலைவர்
- மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து?
- ஷரத்து 143
- அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை?
- குடியரசுத் தலைவர்
- பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை?
- குடியரசுத் தலைவர்
- ஒரு மசோதா மூன்றாவது நிலைகளில் செல்லும் இடம்?
- குடியரசுத் தலைவரிடம்
- இந்தியாவில் அவசர காலம் நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர்?
- குடியரசுத் தலைவர்
- உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர்?
- குடியரசுத் தலைவர்
- குடியரசு தலைவருக்கான ஆலோசனை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்து?
- ஷரத்து 143
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமிப்பவர்?
- குடியரசுத் தலைவர்
- மாநில ஆளுநரை நியமிப்பவர்?
- குடியரசுத் தலைவர்
- இந்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர்?
- குடியரசுத் தலைவர்
- தேசிய நெருக்கடி கால நிலையை எந்த சரத்தின் படி குடியரசு தலைவர் அறிவிக்க இயலும்?
- ஷரத்து 352
- குடியரசு தலைவர் பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின் படி அறிவிக்க இயலும்?
- ஷரத்து 360
- ஒரு அமைச்சரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர்?
- குடியரசுத் தலைவர்
- குடியரசுத் தலைவர் ஒரு அமைச்சரை யாருடைய ஆலோசனைக்குப் பிறகு நீக்க இயலும்?
- பிரதமர்
- இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர்?
- குடியரசுத் தலைவர்
- குடியரசு தலைவரால் இயற்றப்பட்ட அவசர சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுகின்றன?
- பாராளுமன்றம்
- இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகள் எந்த நாட்டின் அரசியலமைப்பை பிரதிபலிக்கிறது?
- இங்கிலாந்து
- இந்திய குடியரசுத் தலைவரின் மாத சம்பளம்?
- 1,50,000/-
- இந்திய துணை குடியரசுத் தலைவரின் மாத சம்பளம்?
- 1,25,000/-
- இந்தியா ஏவுகணையின் தந்தை எனப்பட்ட குடியரசுத் தலைவர்?
- ஏ பி ஜே அப்துல் கலாம்
- துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட்ட வேண்டிய பாராளுமன்ற சபை?
- மாநிலங்களவை
Article Tags:
featured · india janathipathy · indian president · janathipathi · Powers of the President of India · president · president powerArticle Categories:
பொது அறிவு