மத்திய ஆயுதப்படை கான்ஸ்டபிள் 24,369 காலி பணியிடங்கள் | SSC Constable (GD) Online Apply

Written by
SSC CONSTABLE GD REQUITMENT NOTIFICATION

SSC Constable (GD) வேலைவாய்ப்பு 2022

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் மத்திய அரசின் CRPF-மத்திய ரிசர்வ் போலீஸ் படை, CISF-மத்திய தொழில் பாதுகாப்புப் படை, BSF-எல்லைப் பாதுகாப்புப் படை உள்பட பல்வேறு ஆயுத படைகளில் மொத்தம் 24,369 பணியிடங்கள் காலியாக உள்ளது.

SSC GD Constable வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 :

நிறுவனம்Staff Selection commission
பதவிகான்ஸ்டபிள்
வகைமத்திய அரசு
மொத்த காலியிடம்24,369
வேலை இடம்இந்தியா முழுவதும்
தகுதிஇந்திய குடிமகன்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
இணையதள முகவரிClick Here
ஆரம்ப தேதி27.10.2022
கடைசி தேதி30.11.2022

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மொத்த காலியிடங்கள்:

ஆயுதப்படையில் Central Armed Police Forces (CAPFs) Constable (GD), SSF, Rifleman (GD) போன்ற பிரிவுகளில் மொத்தம் 24,369 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மொத்த காலியிடங்கள் 24,369

எந்தெந்த பிரிவுகளில் எவ்வளவு காலியிடம்:

 1. பிஎஸ்எப் (BSF) : 10,497 காலியாக உள்ளது (8922 ஆண்கள் / 1575 பெண்கள்)
 2. சிஐஎஸ்எப் (CISF) : 100 காலியாக உள்ளது (90 ஆண்கள் / 10 பெண்கள்)
 3. சிஆர்பிஎப் (CRPF) : 8,911 காலியாக உள்ளது (8380 ஆண்கள் / 531 பெண்கள்
 4. எஸ்எஸ்பி (SSB) : 1,284 காலியாக உள்ளது (1041 ஆண்கள் / 243 பெண்கள்)
 5. ஐடிபிபி (ITBP) : 1613 காலியாக உள்ளது (1371 ஆண்கள் / 242 பெண்கள்)
 6. ஏஆர் (AR) :1697 காலியாக உள்ளது ( 1697 ஆண்கள் / 0 பெண்கள்)
 7. எஸ்எஸ்எப் (SSF) : 103 காலியாக உள்ளது (78 ஆண்கள் / 25 பெண்கள்)
 8. NCP : 164 இடங்கள்

ஆக மொத்தம் 24,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு:

18 முதல் 23 வரை

வயது வரம்பு 01-01-2023 -ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். விண்ணப்பம் செய்வர்கள் 02-01-2000க்கு முன்பும், 01-01-2005 பின்பும் பிறந்திருக்க கூடாது.

SSC Recruitment 2022 - Constable
SSC Recruitment 2022 – Constable

தேர்வு முறை:

 • கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு
 • உடல் தகுதி தேர்வு
 • மருத்துவ பரிசோதனை
 • ஆவணங்கள் பரிசோதனை

ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

(தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் & புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.)

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் 100/-

Female, SC ,ST, முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு கட்டணம் கிடையாது.

ஊதியம்:

 • NCP தடுப்பு பிரிவு: 18,000/- முதல் 56,900/- வரை
 • இதர பணிகள்: 21700/- முதல் 69,100/- வரை

விண்ணப்பிக்கும் முறை:

 • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
 • முதலில் அதிகார பூர்வமான இணையதளத்திற்கு SSC செல்லவேண்டும்.
 • பின்பு ஏற்கனவே இந்த Website ல் பதிவு செய்து இருந்தால் Login செய்து உள் நுழையவும்.
 • பின்பு அதில் தேவைப்படும் சுயவிவரங்கள் மற்றும் கல்வி தகுதிகள் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
 • அதன் பிறகு தேவைப்படும் ஆவணக்களை கலரில் தேவைப்படும் அளவில் தெளிவாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 • நிறைவாக விண்ணப்பக் கட்டணம் செலுத்தி பிறகு கிடைக்கும் விண்ணப்ப நகலை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்

1.BSF-எல்லைப் பாதுகாப்புப் படை 

எல்லைப் பாதுகாப்புப் படை(Border Security Force) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் ஒரு படையாகும். இது மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை டிசம்பர் 1 – 1965 ல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும்.

1965 வரை இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியை அந்தந்த மாநில ஆயுதப் படைகளே பாதுகாத்து வந்தன. ஏப்ரல் 9 -1965 குஜராத் மாநில கட்ச் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தால் சர்தார் போஸ்ட், சார் பெட் மற்றும் பெரியா பெட் ஆகிய இந்திய வீரர்கள் தாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் போர் 1965 நடந்து முடிந்தது. அதனையடுத்து இந்திய சர்வதேச எல்லைப் பகுதியை பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை என்ற வலிமையான படை டிசம்பர் 1 – 1965 ல் அன்று உருவாக்கப்பட்டது.

2.CISF-மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை:

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (Central Industrial Security Force), ஜூன் 15- 1983 ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆயுதம் ஏந்திய மத்திய காவல் படைகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய தொழில் நிலையங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை இராணுவப் படையாகும். அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதான சின்னங்கள் போன்றவைகளை பாதுகாக்கிறது. இதன் தலைமை செயலகம் புதுதில்லியில் உள்ளது. இந்தப் படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி மார்ச் 10- 1969 ல், 2,800 படைவீரர்களுடன் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது. இதன் அப்போதைய பணி மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதாகும். பின்னர், ஜூன் 15- 1983 ல் இயற்றப்பட்ட மற்றொரு சட்டத்தின் படி, ஆயுதம் ஏந்தும் உரிமை வழங்கப்பட்டது. பின்னர், இதன் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டு, மத்திய அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கியது. இதன் மூலம் எல்லா விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே நிலையங்கள் போன்ற பொதுத்துறை நிலையங்கள் இதன் கட்டுப்பாட்டில் வந்தன. இந்திய தலைநகருக்கு அச்சுறுத்தல் அதிகமானதையடுத்து, எப்ரல் 15- 2007 முதல் டெல்லி மாநகரக் காவல் இப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிப்ரவரி 25- 2009 ல் அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தின்படி தனியார் நிறுவனங்களுக்கும், கூட்டுறவு நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கியது. தற்போது இப்படையில் 120000 படைவீரர்கள் உள்ளனர்.

3.CRPFமத்திய ரிசர்வ் போலீஸ் படை

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) என்பது இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதப்படை ஆகும். இது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறது.

CRPF-ன் முதன்மைப் பங்கு, சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதில் மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு உதவுவது மற்றும் கிளர்ச்சிக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகளில் உள்ளது. இது மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றால் ஆனது. இது 27 ஜூலை 1939 இல் அரச பிரதிநிதியின் காவல்துறையாக நடைமுறைக்கு வந்தது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு டிசம்பர் 28- 1949 அன்று CRPF சட்டம் இயற்றப்பட்டதன் அடிப்படையில் இது மத்திய ரிசர்வ் போலீஸ் படையாக மாறியது. சட்டம் ஒழுங்கு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு கடமைகளுக்கு கூடுதலாக, CRPF இந்தியாவின் பொதுத் தேர்தல்களில் பெருகிய முறையில் பெரிய பங்கைக் கொண்டுள்ளது. அமைதியின்மை மற்றும் அடிக்கடி வன்முறை மோதல்கள் இருப்பதால், இது குறிப்பாக ஜம்மு காஷ்மீர், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக உண்மை. செப்டம்பர் 1999 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ​​பாதுகாப்பு ஏற்பாடுகளில் CRPF முக்கியப் பங்காற்றியது. சமீபகாலமாக, ஐ.நா. பணிகளிலும் CRPF  படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

4.SSB-சசஸ்த்திர சீமை பலம் எஸ்.எஸ்.பி. 

சசஸ்த்திர சீமை பலம் (Sashastra Seema Bal) என்பது இந்திய – நேப்பாளம் மற்றும் இந்திய – பூட்டான் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப்படைகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் ( 263.கி.மீ ), உத்திரப் பிரதேசம் ( 599.3 கி.மீ), பீகார் ( 800.4 கி.மீ ), மேற்கு வங்காளம் ( 105.6 கி.மீ ) மற்றும் சிக்கிம் ( 32 கி.மீ ) ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய – நேப்பாள எல்லைகளான 1751 கி.மீ தூரத்தை பாதுகாக்கிறது. சிக்கிம் ( 32 கி.மீ ), மேற்கு வங்காளம் ( 183 கி.மீ ), அசாம் ( 267 கி.மீ ) மற்றும் அருணாச்சல் பிரதேசம் ( 217 கி.மீ ) ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியையும் பாதுகாக்கிறது.

இந்திய சீன சச்சரவுகளுக்குப்பின் எல்லைப்பாதுகாப்பின் தேவை உணர்ந்து வடக்கு அசாம், வடக்கு மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேச மலைகள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க 1963 -ல் உருவாக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக மணிப்பூர், திருபுரா, ஜம்மு (1965), மேகாலையா (1975), சிக்கிம் (1976), இராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லைப்பகுதிகள் (1989), தெற்கு மேற்கு வங்காளம், நாகாலாந்து (1989) மற்றும் இதர ஜம்மு காஷ்மீர் மாவட்டங்கள் என இதன் பாதுகாப்புப் பணி விரிவு படுத்தப்பட்டன. பாதுகாப்புச் மறுசீரமைப்பிற்குப் பிறகு ஜனவரி 1- 2001 ல் இந்திய – நேப்பாள எல்லையும், 2004 மார்ச்சு இந்திய – பூட்டான் எல்லையும் இதன் பிரதான பாதுகாப்புப் பகுதிகளாக மாற்றப்பட்டன.

5.ITBP-இந்திய – திபெத் எல்லைக் காவல்படை

இந்திய – திபெத் எல்லைக் காவல்படை (Indo-Tibetan Border Police -ITBP) என்பது இந்திய – சீன எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். லடாக் பகுதியிலுள்ள கரகோரம் கணவாய் முதல் அருணாசலப் பிரதேசம் ஜசிப் லா என்ற இடம் வரையுள்ள 3488 கி.மீ இந்திய – சீன எல்லையை பாதுகாக்கிறது. பனி பனிப்புயல், பனிப்பாறை சரிவுகள், நிலச்சரிவுகள் போன்ற இயற்கை சீற்றங்களுடன் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் 9000 முதல் 18000 அடி உயரத்தில் எல்லையை காக்கிறார்கள். உள்நாட்டு மருத்துவ முகாம், பேரழிவுக்கால மேலாண்மை, அணுக்கரு மற்றும் கதிர் விபத்து, உயிரியல் மற்றும் வேதியல் பேரழிவுகள் போன்ற சூழல்களுக்கு ஏற்ப இப்படை பயிற்சிப் பெற்றுள்ளது. பொசுனியா எர்செகோவினா, கொசோவோ, எயிட்டி, சூடான் மற்றும் எந்த நாட்டிலும் ஐ.நா. அமைதி நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறது. மலைகளில் மீட்புபணி புரிவதாலும், இயற்கை பேரழிவுகள் நடக்குமிடம் என்பதாலும் இப்படையின் பெரும்பாலனவர்களுக்கு மலையேற்றமும், பனிச்சறுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய – திபெத் எல்லைக் காவல்படை அக்டோபர் 24- 1962 ல் மத்திய சேமக் காவல் படைச் சட்டம் மூலமாக உருவாக்கப்பட்டது. பின்னர் இந்திய – திபெத் எல்லைக் காவல்படைச் சட்டம் உருவாக்கப்பட்டு 1994 முதல் மறுவரையறை செய்யப்பட்டது.

6.AR-அசாம் ரைப்பிள்ஸ்

அசாம் ரைப்பிள்ஸ் (Assam Rifles) இந்தியத் துணை இராணுவப் படைகளில் மிகவும் பழமையானது. இதனை இந்தியாவை ஆண்ட பிரித்தானியா -ன் இந்தியப் பேரரசு 1835 ல் நிறுவியது. இதற்கு 1917 ல் அசாம் ரைப்பிள்ஸ் என்று பெயரிடப்பட்டது. இப்படைகளின் முதன்மை நோக்கம், வடகிழக்கு இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பதே ஆகும். தற்போது இப்படைகளின் ஒரு பிரிவினர் ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப் பகுதிகளில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. முதலாம் உலகப் போரின் போது இப்படைகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் செயல்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது இப்படைகள், ஜப்பானுக்கு எதிராக பர்மாவில் தங்கி போரிட்டது. 1951 ல் திபெத்தை சீனா தன்னுடன் வலுகட்டாயமாக இணைத்துக் கொண்ட போது, அசாம் ரைபிள்ஸ் படைகள் திபெத்-அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைகளை காத்தனர். மேலும் அசாம் ரைபிள்ஸ் படைகள் அருணாச்சலப் பிரதேசத்தில் சட்டம்-ஒழங்கு பணிகளை உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்கிறது.

அசாம் ரைபிள்ஸ் படைகள், இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இயங்குகிறது. இந்திய இராணுவத்தின் தலைமையில், அசாம் ரைபிள்ஸ் படைகள் உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைள், மற்றும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கிற்து. மேலும் தொலைதூரத்தில் உள்ள எல்லைப்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் தொலைதொடர்பு வசதிகள் செய்து தருகிறது. 2002 -ஆம் ஆண்டு முதல் அசாம் ரைபிள்ஸ் படைகள் இந்திய-மியான்மர் எல்லைப்பகுதிகளை காவல் செய்கிறது.

7.SSF-சிறப்பு எல்லைப்புறப் படை

சிறப்பு எல்லைப்புறப் படை (Special Frontier Force-SFF) இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு உளவுப் பிரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் கீழ் செயல்படும் துணைநிலை இராணுவப் படையாகும். இது இந்திய சீனப் போருக்குப் பின்னர் நவம்பர் 14- 1962 ல் இமயமலையில் உள்ள இந்திய எல்லைகளை, சீனர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் பார்வையிலிருந்து கண்காணிப்பதற்கான அமைக்கப்பட்ட சிறப்பு எல்லைப் படையாகும்.

இந்திய அமைச்சரவை செயலகத்தின் பாதுகாப்பு இயக்குநரின் கீழ், 5,000 வீரர்கள் கொண்ட இப்படையின் தலைமை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் இருப்பார். இப்படையின் செயல்பாடுகள் குறித்து இவர் இந்தியப் பிரதமருக்கு மட்டும் அறிக்கை அளிப்பார். இதன் தலைமையிடம் உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவடடத்தில் உள்ள சக்ராதா எனுமிடத்தில் உள்ளது.

இந்த சிறப்பு எல்லைப்புற படை வீரர்கள் இந்திய எல்லைபுறங்களில் குறிப்பாக இமயமலைப் பகுதிகளில், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் உளவுப் பணிகள் மேற்கொள்வதில் கைதேர்ந்தவர்கள். இப்படையின் அனைத்து வீரர்ககளும் இமயமலை பகுதியில் வாழும் திபெத்தியர்கள் மற்றும் கோர்க்காக்கள் ஆவர். இவர்களது முகம் மற்றும் உடலமைப்பு சீனர்கள் போன்று இருப்பதால் திபெத் மற்றும் லடாக் போன்ற பகுதிகளில் இப்படை வீர்ர்களால் இராணுவ உளவுப் பணிகளில் ஈடுபட வசதியாக உள்ளது.

சிறப்பு எல்லைப்புற படை இதுவரை வங்காளதேச விடுதலைப் போர், புளூஸ்டார் நடவடிக்கை காக்டஸ் நடவடிக்கை, பவன் நடவடிக்கை, கார்கில் போர், ரட்சக் நடவடிக்கை மற்றும் 2020 இந்திய-சீனா எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ளது.

8.NCB-தடுப்புப் பிரிவு

தேசிய NCP தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau) என்பது இந்தியாவில் NCP புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47 -ன் படி மருத்துவ உபயோகங்கள் தவிர மற்ற அனைத்து வகையான NCP உபயோகத்தை தடுக்க வழிவகை செய்கிறது.

Comments

 • Good Work..

  Akash October 29, 2022 4:20 pm Reply

Leave a Reply

Your email address will not be published.

Shares
%d bloggers like this: