தமிழ் வழி சான்றிதழ் PSTM Certificate
பள்ளிக்கல்வியில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை (PSTM ) இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பள்ளிக் கல்வித்துறையின் புதிய அறிவிப்பின்படி இனி நேரடியாக கையால் பூர்த்தி செய்த சான்றிதழை தலைமை ஆசிரியர்கள் வழங்கக் கூடாது.
தமிழகத்தில் மாணவர்களும், பொதுமக்களும் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழ் (PSTM) பெற வேண்டுமென்றால் அவர்கள் படித்த பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய ஆவணங்களை காண்பித்து கையெழுத்து வாங்க வேண்டும்.
மேலும் பள்ளிக்கல்வியை தமிழ் வழியிலேயே 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் போது உதவி தொகையும் வழங்கப்படுகிறது
இந்த தமிழ் வழிச் சான்றிதழானது பள்ளி மற்றும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு, அரசு பணிகள், TPSC அரசு தேர்வு இட ஒதுக்கீடு போன்ற பல இடங்களில் முக்கிய ஆவணமாக இருக்கிறது.
இந்நிலையில் மாணவர்கள் தங்களுடைய தமிழ் வழி பெறுவதற்கு இனி இ-சேவை மையத்தை அணுகினால் மட்டுமே போதுமானது என பள்ளி கல்வித்துறை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Visit: பொது இ-சேவை மையம்
அதன்படி தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
மாணவர்கள் தமிழ் வழி சான்றிதழை பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பித்த பிறகு, மின்னஞ்சல் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விண்ணப்பம் அனுப்பப்படும். அதன் பிறகு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அதை அனுப்ப வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் ஆசிரியர்கள் பொதுவாக பயன்படுத்தும் இ.எம்.ஐ.எஸ் (EMIS) தளத்தில் காண்பிக்கப்படும். இதனை அடுத்து தலைமை ஆசிரியரும் காலம் தாழ்த்தாமல் விண்ணப்பதாரரின் பதிவேடுகளை சரிபார்த்து மின் கையொப்பம் செய்து உடனடியாக பதிவேற்றம் செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை விண்ணப்பதாரர் அனுப்பி இருக்கும் ஆவணங்களில் தவறுகள் இருப்பின் அதை நிராகரிக்கவும் தலைமை ஆசிரியருக்கு உரிமை உண்டு.
மேலும் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து மூலம் மாணவர்கள் சுலபமான முறையில் தமிழ் வழி சான்றிதழ் பெற்றுக் கொள்வதுடன் தலைமை ஆசிரியர்கள் இனி நேரில் வந்தால் தமிழ் வழி சான்றிதழை கொடுக்கக் கூடாது எனவும் இ சேவை மையத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தம்படியும் கல்வித் கல்வித் துறை அறிவித்துள்ளது.