கிராம உதவியாளர் பணிகள் | VAO Assistant Job Vacanvy
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தமிழக அரசு தற்பொழுது புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
கிராம உதவியாளர் பணி என்றால் என்ன?
தமிழ்நாட்டின் வருவாய் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (VAO) கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கிராம உதவியாளர்கள் வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கிராம உதவியாளர் பதவிக்கு வயது வரம்பு:
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
குறைந்தபட்ச வயது அனைத்து பிரிவினருக்கு 21க்கு மேல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழக அரசின் வருவாய் துறையின் (https://cra.tn.gov.in) இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
கிராம உதவியாளர் பதவிக்கான அடிப்படைத் தகுதிகள்:
- குறைந்தபட்சம் 5 -ம் வகுப்புத் தேர்ச்சி
- விண்ணப்பதாரர்களின் வயது 21 வயது முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்
- தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
- அறிவிக்கப்பட்ட பதவிக்கான வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
- வண்டி ஓட்டும் திறன் இருக்க வேண்டும்.
- இருதாரமணம் இருக்கக் கூடாது.
தேவைப்படும் விண்ணப்பதாரர் விவரங்கள்:
- விண்ணப்பதாரரின் பெயர்
- தந்தை /கணவரின் பெயர்
- தொடர்புக்கான முகவரி
- பாலினம் / தேசிய இனம் / மதம் / சமூகம்
- பிறந்த தேதி
- சொந்த மாவட்டம் / இருப்பிட மாவட்டம்
- விண்ணப்பிக்கும் கிராமம்
- மொபைல் எண் / மின்னஞ்சல் முகவரி
- கல்வித் தகுதி / தொழில்நுட்பத் தகுதி விவரங்கள்
- சைக்கிள் ஓட்டுதல் / வாகனம் ஓட்டுதல் விவரங்கள்
- ஓட்டுநர் உரிம எண் / உரிமம் செல்லுபடியாகும் தேதி
- படிக்கவும் எழுதவும் தெரிந்த மொழிகள்
- கிரிமினல் வழக்கு விவரம்
- பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்கள்
- புகைப்படம் (Only jpg,png – 50kb)
- கையொப்பம் (Only jpg,png – maximum size 50kb)
- இருப்பிடச் சான்று (Only Pdf – maximum size 256 kb)
- கல்வித் தகுதிச் சான்று (Only Pdf – maximum size 256 kb)
- ஓட்டுநர் உரிமம் (Only Pdf – maximum size 256 kb)
- சாதி சான்று (Only Pdf – maximum size 256 kb)
- முன்னாள் படைவீரர் சான்று
- மாற்று திறனாளி சான்று
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி:
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 07.11.2022
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 30.11.2022
நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள் 15.12.2022 & 16.12.2022
சம்பள விவரம்:
மாதம் 11,100/- முதல் 35,100/-
கிராம உதவியாளர் பணியிடங்களில் இடஒதுக்கீடு:
தமிழக அரசின் இடஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்படும். பெண்களுக்கான 30% இடங்கள் உட்பட.
அரசுப் பணியாளர்கள்:
அரசுப் பணியாளர்கள் தங்களது துறையில் இருந்து தடையின்மைச் சான்று சமரிப்பிக்க வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினருக்கு சலுகைகள்:
முன்னாள் ராணுவத்தினர்க்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும். அதன்படி இடஒதுக்கீடு பிரிவின் கீழ் முன்னாள் ராணுவத்தினர் வயது வரம்பு 53 -க்கு கீழ் இருக்க வேண்டும். பொது பிரிவின் கீழ் முன்னாள் ராணுவத்தினர் வயது வரம்பு 48 -க்கு கீழ் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள்:
மாற்றுத்திறனாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் 10 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகைகள் அளிக்கப்படுகிறது.
இருப்பினும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 64 -ன் கீழ் தேர்வு செய்யப்பட்டு திறமையுடன் செய்து முடிப்பதற்கு உடல் குறைபாடு தடையாக இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும்.
திருநங்கைகளுக்கு சலுகைகள்:
பெண் என அடையாளப்படுத்திக் கொள்ளும் திருநங்கை விண்ணப்பதாரர்கள், பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டின் கீழும், பொதுப் பிரிவினருக்கான 70% கீழும் பயன்களைப் பெறுவர்.
தமிழ்நாடு திருநங்கை நல வாரியாத்தால் வழங்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
பி.இ/பி.டெக் மாணவர்கள்:
குறைந்தபட்சம் 5 -ம் வகுப்புத் தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பி.இ/பிடெக் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த கூடுதல் கல்வித் தகுதி வேலையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை:
கல்வித் தகுதியை முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் கொரோனா தொற்றினால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், இதர காரணங்களால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், தனியார் மற்றும் அரசு நடத்தும் அனாதை இல்லங்களில் தங்கி பயின்று வளர்ந்து வரும் தாயையும், தந்தையையும் இழந்த விண்ணப்பதாரர்கள், தாய் தந்தையற்றோர் சான்றிதழ் பெற்றவர்கள், முதல் பட்டதாரிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு முறை:
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
திறனறிதல் தேர்வு வாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இருக்கும். எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு மதிப்பெண் 10 வழங்கப்படும். ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு மதிப்பெண் 30 வழங்கப்படும்.
குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நேரும் போது விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதில் தாமதமோ அல்லது தொழில் நுட்பச் சிக்கலோ எழ வாய்ப்புள்ளது.