ரேஷன் கடைகளில் உள்ள 2744 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Written by
drb-recruitment-ls-magazine

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு,  சேலம், கரூர்,  விழுப்புரம், நாமக்கல், விருதுநகர், செங்கல்பட்டு, பட்டுக்கோட்டை, திருவண்ணாமலை, அரியலூர், தென்காசி, இராணிப்பேட்டை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் நியாய விலை கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பணி இடங்களை நேரடி நியமனம் செய்ய ஆன்லைன் மூலம் பதிவு செய்ய தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 2744 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து  விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக 14.11.2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

கல்வி தகுதிகள்:

 1. விற்பனையாளர் (Salesman) – மேல்நிலை வகுப்பு (+2 ) அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி தேர்ச்சி
 2. கட்டுநர் (Packer) – பத்தாம் வகுப்பு தேர்ச்சி (10th)

வயது தகுதி:

விண்ணப்ப தாரர்கள் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் 32 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிற்கும் முறை:

விண்ணப்பப் படிவங்கள் இணையதளம் மூலம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தையும் அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் தெளிவாக ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பொது இ-சேவை மையம்

பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள்:

 1. விண்ணப்பதாரரின் புகைப்படம் – 50 KB அளவுக்கு மிகாமல் (Jpg or Jpeg format)
 2. விண்ணப்பதாரரின் கையெழுத்து – 50 KB அளவுக்கு மிகாமல் (Jpg or Jpeg format)
 3. விண்ணப்பதாரரின் ஜாதி சான்றிதழ் – 200 KB அளவுக்கு மிகாமல் (PDF format)
 4. நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதிக்கான சான்றிதழ் – 200 KB அளவுக்கு மிகாமல் (PDF format)
 5. குடும்ப அட்டை அல்லது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை – 200 KB அளவுக்கு மிகாமல் (PDF format)
 6. SBI Collect“என்ற சேவையை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டண இரசீது செலுத்தி இருப்பின் அந்த இரசீது (அல்லது) கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நேரடியாக செலுத்தி இருப்பின் (DRB Copy of the pay-in-slip)) அவற்றை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். – 200 KB அளவுக்கு மிகாமல் (PDF format)
 7. மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் – 200 KB அளவுக்கு மிகாமல் (PDF format)
 8. ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ் – 200 KB அளவுக்கு மிகாமல் (PDF format)
 9. முன்னாள் ராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ் – 200 KB அளவுக்கு மிகாமல் (PDF format)
 10. ஏற்கனவே 2020 -ம் ஆண்டு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்த முறை விண்ணப்பிக்கும் போது கடந்த முறை அளித்த விண்ணப்ப நகல்/வங்கி செலான் / நேர்முக தேர்வுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்று – 200 KB அளவுக்கு மிகாமல் (PDF format)
 11. தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் (அரசாணை நிலை எண் 82 மனிதவள மேலாண்மை S துறை நாள் 16.08.2021 இன் இணைப்பில் உள்ளபடி – 200 KB அளவுக்கு மிகாமல் (PDF format)
 12. முன்னுரிமை கூறும் இனத்திற்கான இனங்களுக்கான சான்றுகள் – 200 KB அளவுக்கு மிகாமல் (PDF format)

குறிப்பு:-

ஆதரவற்ற விதவை என்பது அனைத்து வழிகளிலும் பெரும் மொத்த மாத வருமானம் ரூபாய் 4000/- த்திற்கும் குறைவாக பெறுகின்ற ஒரு விதவையை குறிப்பதாகும். இவ்வருமானம் குடும்ப ஓய்வூதியம் அல்லது தொழிற்கல்வி பெற்றவர்களின் சுயதொழில் மூலம் ஈடுபட்டு வருமானம் உள்ளிட்ட மற்ற வருமானங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.

இத்தகைய விண்ணப்பதாரர்கள் உரிய வருவாய் கோட்ட அலுவலர் அல்லது உதவி/சார் ஆட்சியரிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

விவாகரத்து பெற்றவர், கணவரால் கைவிடப்பட்டவர் ஆதரவற்ற விதவையாக கருதப்பட மாட்டார். மறுமணம் புரிந்தவர் ஆதரவற்ற விதவையாக கருதப்பட மாட்டார்.

விண்ணப்ப கட்டணம் :-

விற்பனையாளர்கள் கட்டுநர்கள் (Packer) விண்ணப்ப கட்டணம் Rs.150

கட்டுநர்கள் (Packer) விண்ணப்ப கட்டணம் Rs.100

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவுகளையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விளக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை அலுவலர்களிடம் இருந்து சான்றிதழும் மருத்துவ சான்றிதழும் பெற்று இருக்க வேண்டும்.

ஆதரவற்ற விதவைகள் உரிய வருவாய் கோட்ட அலுவலர் அல்லது உதவி/சார் ஆட்சியரிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

முன்னாள் இராணுவத்தினரைப் பொறுத்தவரை முதல் இரண்டு முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு விற்பனையாளர்கள் மற்றும் கட்டிட பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்த முறை விண்ணப்பிக்கும் போது கடந்த முறை அளித்த விண்ணப்ப நகல்/வங்கி செலான் / நேர்முக தேர்வுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்றினை 200 KB அளவுக்கு மிகாமல் (PDF format) ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

காலி பணியிடங்கள்:

மாவட்டங்கள்காலியிடங்கள் எண்ணிக்கைஅறிவிப்புவிண்ணப்பிக்க
கோயம்புத்தூர் 233ViewClick Here
திருச்சி231ViewClick Here
ஈரோடு243ViewClick Here
சேலம்276ViewClick Here
கரூர்90ViewClick Here
விழுப்புரம்244ViewClick Here
நாமக்கல்200ViewClick Here
விருதுநகர்164ViewClick Here
செங்கல்பட்டு178ViewClick Here
பட்டுக்கோட்டை135ViewClick Here
திருவண்ணாமலை376ViewClick Here
அரியலூர்75ViewClick Here
தென்காசி83ViewClick Here
இராணிப்பேட்டை118ViewClick Here
திருநெல்வேலி98ViewClick Here
மொத்த காலியிடங்கள்2744

நேர்முகத் தேர்வு:

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரில் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும். நேர்முக தேர்வுக்கு அழைப்பு கடிதம் பெற்ற விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தங்கள் சொந்த செலவில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைக்கப்படவுள்ள நபர்களின் பெயர் பட்டியல் அந்தந்த மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதள வழியாக வெளியிடப்படும். நேர்முகத்தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல்(E Mail) / குறுஞ்செய்தி(SMS) மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கி நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதங்களை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

அழைப்பு கடிதத்துடன் வராத விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் மதிப்பு (Marks) மற்றும் நேர்முகத் தேர்வில் அளிக்கப்பட்ட சராசரி மதிப்பெண்கள் முறையை 50:50என்ற விகிதத்தில் இருக்கும்.

குறிப்பு:

2020-2021 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறிப்பிடாமல் ஒவ்வொரு பாடத்திற்கும் எதிராக மதிப்பெண் குறிப்பிடாமல் PASS என்று குறிப்பிட்டு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் தாங்கள் படித்த பள்ளியில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழனை அந்த தலைமை ஆசிரியரின் சான்றொப்பம் பெற்று (மொத்த மதிப்பெண்கள், பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு) அதனை 10 ஆம் வகுப்பு PASS என்று வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் உடன் இனைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்தகைய தேர்வுகளில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழையும் இணைக்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

(இத்தகைய தேர்வுகளில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழுக்கு பதிலாக விண்ணப்பதாரர்கள் 9 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே உரிய மதிப்பு வழங்கப்படும்.)

நேர்முகத் தேர்வுக்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் அவர்களின் அவற்றின் நகல் ஒன்றுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். நேர்முக தேர்வுக்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் எந்த நிலையிலும் இது தொடர்பான எந்த உரிமையும் கோர இயலாது. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.

தடை தடையில்லா சான்றிதழ்:

விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பணியாற்றுபவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பணியாற்றும் அலுவலகத்தில் இருந்து தேவையான தடையில்லா சான்றிதழனை நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

இதர நிபந்தனைகள்:

10th / +2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெறாத நபர்கள் அதைவிட அதிகமான கல்வித் தகுதி பெற்றிருந்தாலும் இத் தேர்விற்கு தகுதி உடையவர்களாக கருதப்பட மாட்டார்கள்.

இத்தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கு இணையான கல்வித் தகுதி உரிமை கோரும் நபர்கள் இத்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளன்றோ அதற்கு முன்னரே வெளியிடப்பட்ட உரிய அரசாணையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்காவிட்டால் தனியரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு அவ்வாறு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டதை மட்டும் காரணமாக வைத்து பணி நியமனம் கோவர உரிமை கிடையாது

காரணம் ஏதும் தெரிவிக்காமல் இந்த அறிவிக்கையை ரத்து செய்வதற்கு / திரும்பப் பெறுவதற்கும் / திருத்துவதற்கும் / கெடு தேதியை நீட்டிப்பதற்கு மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்திற்கு உரிமை உண்டு.

விண்ணப்பதாரர்கள் அவர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்பாக இணையதளத்தில் உள்ள “விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்” பகுதியை கவனமாக படித்து தெரிவு செய்யப்படுவதற்குரிய நிபந்தனை புரிந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தினை சமைப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரத்துக்கு பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான வசதி நிறுத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் இமெயில் மூலம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மின்னஞ்சல் முகவரி வழியாக அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கும் விண்ணப்பத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நேரும் போது விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதில் தாமதமோ அல்லது தொழில் நுட்பச் சிக்கலோ எழ வாய்ப்புள்ளது.

எனவே மேற்கூறிய தொழில்நுட்ப காரணங்களால் அல்லது வேறு காரணங்களால் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் பொறுப்பாகாது.

இணைப்பதிவாளர்/தலைவர்

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்

Comments

 • Super ❤️ Shan anna u or very good worker 🤩 congratulations shan anna our dreams successful god bless you all the best ❤️

  Kaviya sri October 19, 2022 4:45 pm Reply
 • 10

  Poomani Kuppusamy October 20, 2022 1:10 am Reply
 • Super

  VASANTH M October 30, 2022 9:10 am Reply

Leave a Reply

Your email address will not be published.

Shares
%d bloggers like this: