பார்தி ஏர்டெல் 5ஜி சேவை – Airtel 5G
இந்தியாவில் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் (BHARATI AIRTEL), முதல் கட்டமாக 5G சேவையை டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாராணாசி ஆகிய 8 முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) திட்டங்களையும் அறிவித்துள்ளது.
மேலும் மார்ச் 2024 -க்குள் இந்தியாவில் அனைவருக்கும் 5G சேவை கிடைக்கச் செய்வதை ஏர்டெல் இலக்காகக் கொண்டுள்ளது.

இதற்காக வேறு சிம்கார்டு மாற்றத் தேவையில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
5G சேவையை முதல் கட்டமாக 5G இணைப்புக்கான கட்டமைப்புகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு பிற அனைத்து நகரங்களிலும் இந்த சேவை விரைவில் விரிவு படுத்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 5G அதிவேக இணைய சேவை யை 4G சிம் கார்டு வழியாக, தற்போதுள்ள திட்டத்தின் மூலமாகவே பெற முடியும். இதற்காக தற்பொழுது கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. முழு அளவில் விரிவுபடுத்தும் வரை இந்த சலுகை தொடரும் எனவும் அறிவித்துள்ளது.
தற்போதுள்ள 4G -ன் இணையதள வேகத்தை காட்டிலும் 5G சேவை-ன் வேகம் 20 முதல் 30 மடங்கு வரை அதிகமாக இருக்கும் எனவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 5G பயனாளர்கள் தங்களது டேட்டா வேகமாக குறைவது போல் தோன்றினால் அவர்கள் 5G -ல் இருந்து உடனடியாக 4G -க்கு மாற்றிக்கொள்ளலாம். இதன்மூலம 5G இணைய சேவையை வேண்டும் பொழுது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியும் ஆன கோபால் விட்டல் கூறியிருப்பதாவது:

இந்திய தொலைத் தொடர்புத் துறை வரலாற்றில் புதிய புரட்சிகளை ஏற்படுத்துவதில் ஏர்டெல் நிறுவனம் மிகவும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை வழங்க 5G சேவை அறிமுகப் படுத்துகிறோம்.
5G ஸ்மார்ட்போன் (5G Smart Phone) வைத்துள்ளவர்கள் தற்போதைய சிம்கார்டு (Sim Card) வழியாகவே இந்த சேவையினை பெற்று பயனடையலாம். இந்தியாவின் பொருளாதாரம், கல்வி சேவைகள், சுகாதாரம், உற்பத்தி, வேளாண்மை மற்றும் சரக்குப் போக்குவரத்து போன்றவற்றில் 5G சேவை மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு 5G சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ஏர்டெல் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

பின்தங்கிய ஜியோ:
அக்டோபர் 5 ம் தேதி முதல் 5ஜG சேவையை தொடங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 4 நகரங்களில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 5G சேவை கிடைக்கும் என அறிவித்துள்ளது.
மேலும் படிக்க…ரேஷன் கடைகளில் காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!!
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் 8 நகரங்களிலும் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி 5ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் ஜியோ நிறுவனத்தை விட மேலோங்கி இருக்கிறது.
ரிலையன்ஸின் தலைவர் முகேஷ் அம்பானி இது குறித்து பேசுகையில் டிசம்பர்-2023 அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் ஜியோ 5G கிடைக்கும் என்று அறிவித்தார்.
பிஎஸ்என்எல் (BSNL) 4G சேவை:

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5G சேவையில் களமிறங்கியுள்ள நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் நோக்கில் பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனம் தனது திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் மாதம் முதல் 4G சேவையை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 5G சேவை 2023 ஆகஸ்ட் 15- ல் இருந்து அறிமுகப்படுத்தப்படும் என BSNL நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் வோடபோன் ஐடியா(VI) விரைவில் 5G சேவையை வெளியிடத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளது, ஆனால் அது சரியான தேதியை கூறவில்லை.
இந்தியாவில் 5G சேவைகளுக்கு எவ்வளவு செலவாகும்?
5G சேவைகள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் என்று அரசு கூறியிருந்தது, இதை உறுதிப்படுத்தும் வகையில், மொபைல் காங்கிரஸ் நிகழ்வின் பொழுது மத்திய அமைச்சர் வைஷ்ணவ் மீண்டும் அறிவித்தார். பிரதமர் மோடி இது குறித்து பேசுகையில் முன்பு, 1GB டேட்டாவின் விலை சுமார் ரூ.300/- ஆக இருந்தது, இப்போது 1GB க்கு ரூ.10/- ஆக குறைந்துள்ளது. சராசரியாக இந்தியாவில் ஒரு நபர் ஒரு மாதத்திற்கு 14 GB Data பயன்படுத்துகிறார். இதற்கு மாதம் ரூ.4200/- செலவாகும். ஆனால் அரசின் முயற்ச்சியால் ரூ.125-150 மட்டுமே செலவாகும்.
ஜியோ 5G சேவைகள் உலகில் உள்ள மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்று அம்பானி அறிவித்துள்ளார். ஏர்டெல் -ன் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் 5G சேவை விலைகள் 4G சேவைகளைப் போலவே இருக்கும் என்று தெரிவித்த்துள்ளார். தற்போது மக்கள் அன்லிமிட்டேட் சேவைகளுக்காக சுமார் 400-600 ரூபாய் வரை செலவிடுகின்றனர். எனவே 5G சேவையும் கிட்டத்தட்ட அதை போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
5G சேவை என்றால் என்ன?
5G என்பது 5-ம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவை ஆகும். 4G சேவை மொபைல் பிராட்பேண்டை சாத்தியப்படுத்திய நிலையில், 5G தொழில் நுட்பத்தில் இணைய வேகம் மேலும் மிக அதிகமாக இருக்கும் என்பது தான் உண்மை. ஆனால் 5G என்பது இணைய வேகம் தொடர்பானது மட்டுமே அல்ல, லேட்டன்சி என்று அறியப்படும், தரவுப் பறிமாற்றம் தொடங்குவதற்கு முன்பு நிலவும் சில நொடி தமாதம் 5G தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட இருக்கவே இருக்காது என்று சொல்லப்படுகிறது.
மேலும் பல்வேறு கருவிகள் மற்றும் பொருள்களையும் இணைக்கும் வகையில் 5G தொழில்நுடம் இருக்கும். அந்த வகையில் மருத்துவம், போக்குவரத்து போன்ற பல துறைகளில் இந்த தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
5G தொழில்நுட்பத்தில் இணைய வேகம் எவ்வளவு?
உலகம் முழுவதும் 3G, 4G தொழில்நுட்பத்திற்கு என குறிப்பிட்ட அலைவரிசையும், தரமும், சராசரி வேகமும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு நாடுகளுக்கு இடையேயும் இணையதள வேகத்தில் பெரும் வேறுபாடுகள் இருக்கிறது.
அந்த வகையில் பார்க்கும்போது உலகிலேயே அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4G LTE பயன்பாட்டாளர்களுக்கு சராசரியாக 44 MBBS வேகம் கிடைப்பதாகவும், இந்தியாவை சராசரியாக 9.31 MBBS வேகம் இருப்பதாகவும் “ஓபன்சிக்னல்” https://www.opensignal.com/ என்னும் சர்வதேச கம்பியில்லா இணைய வேக ஆராய்ச்சி நிறுவனம் கூறியள்ளது.
உலகின் முன்னணி மொபைல் சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், 5G தொழில்நுட்பத்தில் அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7 Gbps பதிவிறக்க வேகமும், 3 Gbps பதிவேற்ற வேகமும் இருக்கும் என்று கூறுகிறது.

புதிய 5G மொபைல் வாங்க வேண்டுமா?
ஒரு சில மொபைல்களில் 3G மற்றும் 4G உடன் 5G விருப்பம் இருக்கும். அப்படி இருந்தால் நீங்கள் வேறு மொபைல் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த விருப்பத்தை தேர்வு செய்ய நீங்கள் மொபைலில் செட்டிங்ஸ்> நெட்வொர்க்> மொபைல் நெட்வொர்க்> நெட்வொர்க் விருப்பம் முறைக்குச்சென்று 5G Network என்று இருந்தால் அதை செலக்ட் செய்தால் போதுமானது. அப்படி ஏதும் இல்லாமல் 3G மற்றும் 4G மட்டும் இருந்து, 5G வசதி இல்லை என்றால் நீங்கள் வேறு மொபைல் வாங்க வேண்டும்.