வியாழன் கோள் புகைப்படம்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் 10 பில்லியன் அமெரிக்கா டாலர் (79 ஆயிரம் கோடி) செலவில் 20 ஆண்டு உழைப்புக்குப் பின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள தி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் தொலைநோக்கி கடந்த டிசம்பர் மாதம் தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மிஷன் (James Webb Space Telescope) நாசா (NASA), கனடா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் மிஷன் ஆகும். ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் டிசம்பர் மாதம் 2021 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு பூமியிலிருந்து 1.6 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் என்று அழைக்கக்கூடிய உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் தான் சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் கோளின் விசித்திரமான மற்றும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய கோள்களைத் தாண்டி 5 வதாக அமைந்திருக்கும் வியாழன், ஒரு வாயுக் கிரகம். வியாழனின் மேற்பகுதி ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுவால் நிரம்பியிருக்கிறது.
இதில் தங்கத்துடன் பெர்லியம் பூசப்பட்ட குவி ஆடி கண்ணாடிகள் பொருத்தப்பட்டு உள்ளதால் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் சிறுகோள்களை படம் பிடிக்க இயலும்.
உலகில் மிகப் பெரிய மற்றும் துல்லியமான தொலைநோக்கி கருவியில் பதிவாகியுள்ளது வியாழன் கோளின் பிரம்மாண்டமான காட்சி உலகமே அசந்து நிற்கும் அளவு துல்லியமாகப் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படம் உலக அளவில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விண்வெளி வீரர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
படம் 1 ல் காட்டப்பட்டுள்ளது

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த வியாழன் கோளின் (infrared) படங்களை வெளியிட்ட நாசா, வியாழன் கோள் Greenish Blue பச்சை கலந்த நீல நிறத்தில் இருக்கிறது . மேலும் வியாழனில் வளையங்கள், விண்மீன் திரள்கள், சிறிய செயற்கைக்கோள்கள், தீவிர வெப்பநிலை பகுதி, அரோராக்கள், அங்கு படும் சூரிய வெளிச்சத்தால் தான் பெரிய புயல்காற்று போன்ற அமைப்பு, விடியல் மற்றும் சிவப்பு நிறத்தில் பெரும்புள்ளி, நிலா ( MOON) ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது.
அங்கு படும் சூரிய வெளிச்சத்தால் தான் இவற்றை எல்லாம் நம்மால் இந்த படத்தில் காண முடிகிறது.
இந்த புகைப்படங்கள் வியாழன் கோளின் வடக்கு மற்றும் தெற்கு புலங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர் .
உண்மையில் இது இவ்வளவு அழகாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார் கோள் வானியலாளர் இம்கே டி பேட்டர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக Infrared Light என்று சொல்லக்கூடிய மனித கண்களுக்கு தெளிவாக புலப்படாத கதிர்களால் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளதால் செயற்கையாக நிறங்கள் சேர்க்கப்பட்டு இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாம் இணையத்தில் பார்த்த படங்கள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் அல்ல. இவை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்து அனுப்பிய வடிவத்தில் இருக்காது. இதை விஞ்ஞானிகள் பிராசஸ் செய்து புகைப்படங்களாக மாற்றுகின்றனர்.
வியாழன் கோளின் பிரம்மிப்பூட்டும் புகைப்படங்களை பார்வையிட:
https://www.nasa.gov/content/goddard/webb-telescope-image-galleries-from-nasa
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் லைட் டிடக்டார் (light detectors) சேகரித்த தகவல்களை தொகுப்பாக மாற்றி விஞ்ஞானிகள் பிராசஸ் செய்கின்றனர். STScI (Space Telescope Science Institute) இல், இந்தத் தகவல் குறிப்பு பிராசஸ் செய்யப்பட்டு செயலாக்கப்பட்டு, புகைப்படங்களாக மாற்றப்பட்டது
நாம் சிறுவயது முதலே பள்ளிப் பாடப்புத்தகத்திலிருந்து வியாழன் கோள் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் இருப்பதாக படித்துஇருக்கிறோம் . ஆனால் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த படங்கள் வியாழன் கோளின் வித்தியாசமான தோற்றத்தை வெளியிடுகிறது
இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியின் சிறப்பு என்னவென்றால் பால்வெளித் திரள்களில் இருந்து 13 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியை நோக்கி வந்த ஒளியை கண்டுபிடித்து எடுத்து அனுப்பி உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் தி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் கண்டுபிடிப்பு ஆதிக்கம் செலுத்தும் என்பது கட்டாயம்.
Nice