வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் | Voter Id Aadhaar Card Link online

Written by
Voter Id Aadhaar Link LS Magazine

Voter Id and Aadhaar Card Link

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விபரங்களை உறுதி செய்வதற்காகவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் (Voter Id card/EPIC) ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் 01-08-2022 முதல் நடைபெறுகிறது. அதன்படி அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பணிகளை 31 மார்ச் 2023 ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:-

( தங்களிடம் உள்ள பழைய வாக்காளர் அட்டையில் பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி, முகவரி ஆகியவை ஆதார் அட்டைக்கு முரணாக இருந்தால், ஆதார் + வாக்காளர் அட்டை இணைப்பில் சிக்கல் ஏற்பட நேரிடும் , எனவே இணைப்பிற்கு கடைசி தேதியை நினைவில் கொள்ளாமல் உடனடியாக ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையில் உரிய திருத்தங்கள் செய்து ஆதார் உடன் வாக்காளர் அட்டையை இணைத்துக்கொள்ளுங்கள் )

வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைக்கும் வகையில் தேர்தல் சட்டத்திருத்த மசோதா 2021 -ல் மக்களவையில் ஒப்புதலை பெற்ற பின் மாநிலங்கள் அவையில் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம் 6B- ஐ பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் வாக்குச்சாவடி சம்பந்தப்பட்ட நிலை அலுவலர்களிடம் (BLO) அளிப்பதன் மூலம் (Offline) ஆதார் எண்ணினை இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் வாக்காளர்கள் இணையதளம் https://www.nvsp.in/, https://voterportal.eci.gov.in/ மற்றும் செல்போன் செயலி Voter Helpline App மூலமும் (Online) தங்கள் ஆதார் எண் விவரங்களை இணையவழியில் 6B படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் (SMS) குறுஞ்செய்தி மற்றும் (Phone Call) தொலைபேசி வாயிலாகவும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை வைத்து இணைத்துக் கொள்ளலாம்.

  1. வங்கி புத்தகம் (Bank Passbook)  
  2. நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு-Pan Card)
  3. ஓட்டுனர் உரிமம் (Driving Licence)
  4. இந்திய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்-Passport )
  5. அஞ்சலகம் மூலம் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம் (Post Office Passbook)
  6. தொழிலாளர் நல துறையின் மூலம் வழங்கப்படும் மருத்துவக்காப்பீடு அட்டை(Health Insurance Smart Card)
  7. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி அடையாள அட்டை (MGNREGA Job Card)
  8. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்படும் இருப்பிட அடையாள சான்று (Smart Card Issued by RGI under NPR)
  9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வு ஊதிய ஆவணங்கள் (Pansion document with Photograph)
  10. மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை
  11. சட்டமன்ற, நாடாளுமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அலுவலக அடையாள அட்டை
  12. இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள அட்டை

ஆகியவற்றில் நகல் ஒன்றின் இணைத்துக்கொள்ளலாம்.

சிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி? (agridigimart.in)

வாக்காளர் பட்டியலில் வாக்காளரை உறுதி செய்யவும், வாக்காளர்கள் தகவல்களை 100% சரி செய்வதற்கும், ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இடம் பெறுவதை தவிர்க்கவும், ஒரு வாக்காளரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் இடம் பெற்றிருந்தால் அவற்றை கண்டறியவும், ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது  போலி வாக்காளர்களை கண்டறிய  உறுதுணையாக இருக்கிறது. 

வாக்காளர்களின் ஆதார் எண் சார்ந்த விபரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்கள் படி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி பதிவு அலுவலர்களால் பாதுகாக்கப்படும். 

எனவே அனைத்து வாக்காளர்களும் தானாக முன்வந்து வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்று பார்க்கலாம்..

1. குறுஞ்செய்தி (SMS)

குறுஞ்செய்தி (SMS) மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தங்கள் மொபைலில் Message –> Inbox -ஐ தேர்வு செய்து New Message -ல் 166 அல்லது 51969 என்ற எண்ணிற்கு வாக்காளர் அட்டை எண் ஒரு இடைவெளி விட்டு ஆதாரின் 12 இலக்க எண் ( NHH1234567 123456789100 ) என்ற முறையில் Type செய்து அனுப்பவும்.

2. தொலைபேசி வாயிலாகவும் (Phone Call)

உங்கள் தொலைபேசியிலிருந்து 1950 என்ற எண்ணை அழைக்கவும். இந்த சேவை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கிடைக்கும். நீங்கள் கேட்கும் வழிமுறைகளைப் பின்பற்றி, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை வழங்குவதன் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

3. இணையதளம் (Internet) – Recommend

முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voterportal.eci.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

பின்பு அதில் Login அல்லது Create an account  என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதில் Login என்பது தாங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் User Name, Password மற்றும் Captcha code உள்ளீடு செய்து Login என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

தாங்கள் இதுவரை இந்த வலைதளத்தில் பதிவு செய்யவில்லை என்றால் Create an account என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். படம் 1 ல் காட்டப்பட்டுள்ளது.

How to Link Voter ID Aadhaar Card
Voter Id and Aadhaar Number Link –  படம் 1
How to Link Voter ID Aadhaar Card
Voter Id and Aadhaar Number Link –  படம் 2
How to Link Voter ID Aadhaar Card
Voter Id and Aadhaar Number Link –  படம் 3

அதில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி எதாவது ஒன்றை பயன்படுத்தி பதிவு செய்யலாம். படம் 2 ல் காட்டப்பட்டுள்ளது. இதில் மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்யும் பொழுது Send OTP என்ற ஆப்ஷனை தோன்றும், அதனை கிளிக் செய்தவுடன் உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அந்த OTP ஐ பதிவு (Verify) செய்யவும்.

படம் 3 ல் காட்டப்பட்டுள்ளது.

Verify  செய்த பின்பு திறக்கப்படும் மற்றொரு பேஜில், Create Password -ல் Enter New Password மற்றும் Confirm Password Enter செய்து Create Account கிளிக் செய்து புதிய பதிவினை நிறைவு செய்யவும்.

பின்பு திறக்கப்படும் மற்றொரு பேஜில் Welcome என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் கணக்கின் முகப்பு பக்கத்துக்கு செல்லவும். படம் 4 ல் காட்டப்பட்டுள்ளது.

How to Link Voter ID Aadhaar Card
Voter Id and Aadhaar Number Link –  படம் 4
How to Link Voter ID Aadhaar Card
Voter Id and Aadhaar Number Link –  படம் 5
How to Link Voter ID Aadhaar Card
Voter Id and Aadhaar Number Link –  படம் 6

இந்த முகப்பு பக்கத்தில் Aadhaar Linkage என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்பு திறக்கப்படும் பேஜில் Your Name, Your Surname, State மற்றும் Gender ஆகியவற்றை கொடுத்து Submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். படம் 6 ல் காட்டப்பட்டுள்ளது.

மீண்டும் Aadhaar Linkage என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் திறக்கப்படும் பேஜில் Let’s Start என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

பின்பு திறக்கப்படும் பேஜில் உங்களிடம் ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை எண் இருக்கிறதா? என்று கேட்கப்படும். நீங்கள் YES, I have Voter ID number என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தங்களுடைய Voter id no / EPIC -ஐ உள்ளீடு செய்து Fetch details என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

How to Link Voter ID Aadhaar Card
Voter Id and Aadhaar Number Link –  படம் 7

Fetch details கிளிக் செய்தவுடன் தங்களுடைய EPIC எண்ணை வைத்து இந்திய வாக்காளர் தரவு தளத்தில் தேடப்பட்டு உறுதி செய்யப்படும். உறுதி செய்யப்பட்டவுடன் “We have found this record for your Voter ID NHH0594623 Please click on Proceed button” என்ற தகவல் பெறப்படும். பின்பு Proceed என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். படம் 7 ல் காட்டப்பட்டுள்ளது.

பின்பு உறுதி செய்யப்பட்ட தகவல் தங்களுக்கு காண்பிக்கப்படும், நீங்கள் அதை Verify செய்த பின்பு Save & Continue என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். படம் 8 ல் காட்டப்பட்டுள்ளது.

How to Link Voter ID Aadhaar Card
Voter Id and Aadhaar Number Link –  படம் 8

பிறகு மீண்டும் மொபைல் எண்ணை உறுதிப்படுத்த திரை தோன்றினால் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து OTP பெற்று Submit செய்யவும்.

அதன் பின் திறக்கப்படும் பேஜில் “Detail of person for form – 6B” தங்களிடம் ஆதார் எண் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்கப்படும். அதில் Yes, I have Aadhaar number என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, Aadhaar Number, First Name (ஆதரில் உள்ள படி English), First Name (ஆதரில் உள்ள படி Tamil) தகவல்களை உள்ளீடு செய்து Save & Continue என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். படம் 9 ல் காட்டப்பட்டுள்ளது.

How to Link Voter ID Aadhaar Card
Voter Id and Aadhaar Number Link –  படம் 9

பின் திறக்கப்படும் பேஜில் Name of the Applicant, Place போன்ற தகவல்களை உள்ளீடு செய்து Save & Continue என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். படம் 10 ல் காட்டப்பட்டுள்ளது.

How to Link Voter ID Aadhaar Card
Voter Id and Aadhaar Number Link –  படம் 10

அதன்பின் திறக்கப்படும் பேஜில் ஒருமுறை தகவல்களை சரி பார்த்து பின்பு Submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். படம் 11 ல் காட்டப்பட்டுள்ளது.

How to Link Voter ID Aadhaar Card
Voter Id and Aadhaar Number Link –  படம் 11

பிறகு வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது என்ற ஒரு செய்தி வரும், அதில் 12 இலக்கம் கொண்ட Reference ID (OLF685562356) கொடுக்கப்படும். இந்த Reference ID தங்கள் விண்ணப்பத்திற்கு கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கும் ஒரு குறுஞ்செய்தி வாயிலாக பெறப்படும். இதை வைத்து உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தின் நிலை ஏற்றுக்கொள்ளப்படும் பொழுது மொபைல் எண்ணிற்கும் அனுப்பப்படும்.

How to Link Voter ID Aadhaar Card
Voter Id and Aadhaar Number Link –  படம் 12
How to Link Voter ID Aadhaar Card

இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ள https://www.nvsp.in/ என்ற இணையத்தளபக்கத்திற்கு செல்லவும். பின்பு அதில் உள்ள Track Application Status என்ற ஆப்ஷனை கிளிக் செய்து விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துகொள்ளலாம்.

How to Link Voter ID Aadhaar Card

4. Voter Helpline App

செல்போன் செயலி மூலமாக ஆதார் எண்ணினை இணைக்கும் முறையும் இணையதளம் வாயிலாக இணைக்கும் முறையும் ஒரே மாதிரியானவை.

எனவே இணையதளம் வாயிலாக இணைக்கும் முறையை பின்பற்றியே ஆதார் எண்ணினை Voter Helpline App மூலம் இணைத்துக்கொள்ளலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published.

Shares
%d bloggers like this: